நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

Update: 2022-11-14 23:28 GMT

பவானிசாகர்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு மழை குறைந்து உள்ளதால் அணைக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்துவிட்டது.

நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 600 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 104.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரத்து 400 கன அடி உபரிநீராக திறக்கப்பட்டது. கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 104.7 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடி உபரிநீராக குறைக்கப்பட்டு திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்