போராட்டத்துக்கு பொதுமக்கள் தயாரானதால்கால்வாய் தூர்வாரும் பணி உடனடியாக தொடக்கம்
லத்தேரியில் பொதுமக்கள் போராட்டத்துக்கு தயாரானதையடுத்து கால்வாய் தூர்வாரப்பட்டது,
கே.வி.குப்பம்
லத்தேரியில் பொதுமக்கள் போராட்டத்துக்கு தயாரானதையடுத்து கால்வாய் தூர்வாரப்பட்டது,
கே.வி.குப்பத்ைத அடுத்த லத்தேரி 6-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரக்கோரி பல முறை பொதுமக்கள் முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த பிரச்சினையில் ஊராட்சி அலுவலகத்தை ஊர் மக்கள் முற்றுகையிடப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. இதை அறிந்ததும் ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் 6-வது வார்டுக்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கால்வாய் தூர்வார உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்படி செங்கற்கள், முரம்பு மண் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.