பானிபூரி கொண்டு வர தாமதம் ஆனதால்வட மாநில சிறுவன் மீது தாக்குதல்

ஆண்டிப்பட்டியில் பானிபூரி கொண்டு வர தாமதம் ஆனதால் வடமாநில சிறுவனை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-03-16 18:45 GMT

 உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் ஆண்டிப்பட்டி நகரில் உள்ள வைகை அணை சாலை பிரிவில் பானி பூரி கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு ஆண்டிப்பட்டி நாடார் தெரு பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் நேற்று சென்றார். பின்னர் அவர் அந்த சிறுவனிடம் பானிபூரி கேட்டார். ஆனால் பானிபூரி கொண்டு வருவதற்கு காலதாமதமானதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், அந்த சிறுவனை தாக்கினார். இதுகுறித்து அந்த சிறுவன் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஆனந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்