இந்தியாவை மீட்ெடடுக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்வார்-ஆய்வரங்கில் டி.ஆர்.பாலு எம்.பி. பேச்சு

இந்தியாவை மீட்டெடுக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்வார் என்று ஆய்வரங்கில் டி.ஆர்.பாலு எம்.பி. பேசினார்.

Update: 2023-08-22 19:22 GMT


இந்தியாவை மீட்டெடுக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்வார் என்று ஆய்வரங்கில் டி.ஆர்.பாலு எம்.பி. பேசினார்.

ஆய்வரங்கம்

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவல்பட்டில் தி.மு.க. சார்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.

கட்சி கொடியேற்றியும், ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்தும் கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பேசியதாவது:-

எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. நாம் தலைமைக்கு எந்த அளவிற்கு உண்மையாக உழைக்கிறோமோ அதற்குண்டான பலனை நமக்கு நிச்சயம் தலைமை வழிகாட்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தலைமைக்காக உழைத்து வெகு விரைவில் இந்தியாவை மீட்டெடுக்கும் தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழினத்திற்காக...

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசும்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொது வாழ்வில் நீண்ட நெடிய பயணத்தை கொண்டவர். பல நேரங்களில் தனது உயிருக்கு ஆபத்து வந்த பொழுது நமது தமிழினத்திற்காக ஓயாது உழைத்தவர். தமிழினத்திற்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர் என்றார்.

தொடர்ந்து திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஆளூர் ஷா நவாஸ் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் வரவேற்று பேசினார். மண்டல தலைவர் மதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்