நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத்தொகை வழங்குகின்றனர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத்தொகை வழங்குகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

Update: 2023-09-22 18:17 GMT

வாணியம்பாடி நகரம், ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட கணவாய்புதூர், வளையாம்பட்டு கொல்லக்குப்பம், மதனாஞ்சேரி, ஜாப்ராபாத், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார், நகர செயலாளர் சதாசிவம், பேரூர் செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு புத்தகங்கள் வழங்கி பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது என்ற பேச்சு எழுந்து வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அ.தி.மு.க. வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தி.மு.க. அரசு மகளிர் உரிமைத்தொகை வழங்குகின்றனர். வரும் தேர்தலில் நாம் ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி. சம்பத்குமார், மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் முனிசாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஆர்.வி.குமார், தகவல் தொழில்நுட்ப செயலாளர் நாகேந்திரன், இளைஞர் பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கோபால், என்.பரமசிவம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் குமார், கோவிந்தசாமி, செல்வராஜ் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்