வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது குறித்து, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2023-10-20 10:32 GMT

சென்னை,

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது என்றும், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது என்றும் வானிலை ஆய்வுமையம் நேற்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது குறித்து, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

அப்போது, ஏற்கனவே மேற்கொண்டுள்ள பணிகளை மட்டும் முடிக்க அதிகாரிகளுக்கு சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். மேலும், புதிதாக சாலை, வடிகால் பணிகளை தொடங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து கூடுதல் ஆணையர், நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்