கனிம வளங்கள் கடத்தப்படுவதால்பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படு வதால் அரசிற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவ தாக குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Update: 2022-12-30 18:45 GMT

கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படு வதால் அரசிற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவ தாக குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன் தலை மை தாங்கினார்.

இதில் வேளாண்மை, தோட்டக்கலை, மின்வாரியம் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். அதற்கு கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:-

கனிம வளங்கள் கடத்தல்

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக் கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, தொண் டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கல்குவாரிகளில் இருந்து ஜல்லி, கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் போன்ற கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அரசு அனுமதி வழங்கிய 2 யூனிட்டிற்கு பதிலாக 12 யூனிட் கொண்டு செல்லப் படுகிறது. கனிமவளங்கள் கடத்தப்படுவதால் அரசுக்கு மாதம் தோறும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே மாவட்ட வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயன்படாத கல்குவாரிகளில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவளத்துறை அனுமதி இல்லாமல் அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, தொண்டா முத்தூர், காரமடை மேற்கு பகுதிகளில் இருந்து கிராவல் மண் இரவு நேரங்களில் கடத்தப்படுகிறது. இதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்குவாரிகளுக்கு கனரக வாகனங்கள் செல்வதால் கிராமப்புற சாலைகள் முற்றிலும் சேதம் அடைகின்றன. விபத்து அபாயமும் உள்ளது.

தொழிற்பேட்டை

தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால்:- அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டைக்காக விவசா யிகள் நிலம் எடுக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் விவசாயிகளின் நிலங்களையும் இணைத்து தொழிற் பேட்டை அமைக்க வெளியிட்ட அரசாணை தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. அதை உடனே ரத்து செய்ய வேண்டும்.

திப்பம்பட்டி ஆறுச்சாமி:- கோவை மாவட்டத்தில் தற்போது நெல் நடவு பணிகள் தீவிரமான நடக்கிறது. ஆனால் டி.ஏ.பி., யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.

இதனால் விவசாயிகள் கேரளா சென்று உரம் வாங்கும் நிலை உள்ளது. எனவே தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் டிராக்டர் வழங்கப்படுகிறது. ஆனால் அதை இயக்க ஆட்கள் கிடைப்பது இல்லை.

காட்டுப்பன்றி தொல்லை

பொள்ளாச்சியை சேர்ந்த மெடிக்கல் பரமசிவன்:- மேற்கு புறவழிச்சாலை அமைய உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் ஒரு சில இடங்களில் மண் குவியல்கள் காணப்படுகிறது. இதனால் ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

கோவையை சேர்ந்த செந்தில்குமார்:-

கேரளாவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அந்த மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும்.

கலெக்டருக்கு பாராட்டு

இதுகுறித்து கலெக்டர் சமீரன் பேசும்போது, விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிப்பது தொடர்பான கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்றார்.

ஒட்டன் சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக கலெக்டருக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்