முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தடைந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசு ஒருதலைபட்சமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக்கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்கிறார்.

Update: 2023-06-01 10:29 GMT

சென்னை,

மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.

இந்த நிலையில் முதல் அமைச்சர் முக ஸ்டாலினை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்தடைந்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தின் பாதகம் குறித்தும், மத்திய அரசு ஒருதலைபட்சமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக்கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்