ஆறுமுகநேரியில் டீக்கடையில் மதுவிற்ற கடைக்காரர் கைது
ஆறுமுகநேரியில் டீக்கடையில் மதுவிற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபுகுமார் மற்றும் போலீசார் நேற்று காலையில் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ரோந்து சென்றனர். அங்குள்ள சிங்கராஜ் என்பவரின் டீக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையில் இருந்த 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சிங்கராஜை கைது செய்தனர்.
இதேபோல் ஆறுமுகநேரி சிவன் கோவிலுக்கு எதிரேயுள்ள வல்லமுத்து மகன் இசக்கி முத்து(60) நடத்தி வரும் பெட்டிக்கடையில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டது தெரிய வந்தது. அங்கு விற்பனைக்கு வைக்கப்படிருந்த 120 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இசக்கிமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.