ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்தர திருவிழா நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா, கும்ப பூஜையும், ஹோமம் ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 530 மணி அளவில் கொடியேற்றம் நடந்தது. இதில் திறளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நாட்களில் காலை, மாலையில் அம்பாள், சுவாமி வீதி உலா மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், இன்னிசை, பட்டி மன்றம், சிறப்பு நாதஸ்வர கச்சேரிகள் நடைபெற உள்ளன.