ஆறுமுகநேரியில் வாலிபரின் செல்போனை திருடிய உறவினர் சிக்கினார்

ஆறுமுகநேரியில் வாலிபரின் செல்போனை திருடிய உறவினர் சிக்கினார். அவரிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-10-09 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ராஜமணியபுரம் தெருவை சேர்ந்த ராஜாராம் மகன் தர்மராஜ்குரு (வயது 23). இவர் அங்குள்ள தொண்டு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு நெருங்கிய உறவினரான ஆழ்வார்திருநகரி அடுத்துள்ள மணல்குண்டு கிராமத்தை சேர்ந்த சந்தனராஜ் மகன் முருகன்(28) வந்துள்ளார். சிறிது நேரத்தில் தர்மராஜகுரு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான செல்ேபானை திருடி கொண்டு தலைமறைவாகி விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகனை பிடித்து, தர்மராஜகுருவின் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்