ஆறுமுகநேரி சுப்பிரமணியபுரம் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஆறுமுகநேரி சுப்பிரமணியபுரம் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-06-30 15:41 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சுப்பிரமணியபுரம் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த திங்கட்கிழமை இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலையில் யாகசாலை பூஜை, ஹோமம், தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

நேற்று காலையில் கோவில் விமானத்துக்கும், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக விழாவுக்கு வந்த அமைச்சரை கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகேசன் நாடார், பக்கிள்துரை நாடார், கோபால் நாடார், ரவி நாடார் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். அமைச்சருடன் மாநில தி.மு.க மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீத பாண்டியன், முன்னாள் நகர செயலாளரும், நகர பஞ்சாயத்து துணை தலைவருமான கல்யாணசுந்தரம், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளரும், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவருமான சதீஷ்குமார், ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, திருச்செந்தூர் கார்த்திகேயன், தொழிலதிபர்கள், பூ மகேஷ் ராஜன், பேயன்விளை ஜி.பி.ஸ்ரீராம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்