அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு - 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முருகன் உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.;
சென்னை,
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் கடந்த மாதம் 13-ந்தேதி சுமார் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வங்கி ஊழியரான முருகன், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய அமல்ராஜ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் 6 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன்படி வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முருகன் உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.