அருளானந்தர் ஆலயத்தில் தீ விபத்து

அருளானந்தர் ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-30 21:05 GMT

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை சாலையில் உள்ள அருளானந்தர் ஆலயத்தில் இருந்து நேற்று இரவு கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் உள்ளே சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர்கள் பிரான்சிஸ் மற்றும் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது ஆலய வளாகத்திற்குள் தீ மளமளவென எரிந்தது. விரைவாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள துணிகள், நாற்காலிகள் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்