ஆருத்ரா விவகாரம்... ஆர்.கே.சுரேஷுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்திவைப்பு
ஆர்.கே.சுரேஷ், விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.;
சென்னை,
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ், விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இதை திரும்பப் பெற கோரி, ஆர்.கே. சுரேஷ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆருத்ரா மோசடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும், மனைவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்.கே. சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.