விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வேப்பனப்பள்ளியில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-12-24 18:45 GMT

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளியில் வனத்துறை சார்பில் வனவிலங்குகளை பாதுகாக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் வனக்காப்பாளர் அண்ணாதுரை மற்றும் வன ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுத்தல், பாதுகாத்தல், வனப்பகுதியில் மரங்களை வெட்டுதல், கள்ளத்துப்பாக்கிகளை ஒழித்தல் மற்றும் மரம் நடுதல் குறித்து பொதுமக்களுக்கு கலை குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்