கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு சரிபார்ப்பு பணி
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு சரிபார்ப்பு பணி;
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது அலுவலர்கள் நேரடியாக மனுதாரரின் வீட்டிற்கு சென்று சரிபார்ப்பு செய்து வருகிறார்கள். அதன்படி கொரடாச்சேரி ஒன்றியம் தேவர்கண்டநல்லூர் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப்பதிவு சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தாசில்தார் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.