கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2023-10-02 17:52 GMT

கிராமசபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நாயனசெருவு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிராம ஊராட்சியிகளில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதோ அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மனு நிராகரிக்கப்பட்ட தகவலை அறிந்து மேல் முறையீடும் செய்யலாம். தகுதி இல்லாதவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வந்திருந்தால் அதை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தை திருமணம் நடத்துகின்ற பெற்றோர்கள் மீதும், திருமணத்திற்கு சென்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 15 நாட்கள் பள்ளிக்கு வருகை தராமல் இருக்கும் மாணவ- மாணவிகளை இடைநிற்றல் என்று கருதி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நமது மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதானந்தம், அப்துல் கலீல் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்