செயற்கை சாயம் பூசப்பட்ட 2 டன் ஏலக்காய் பறிமுதல்

போடியில் 2-வது நாளாக நடந்த சோதனையில், செயற்கை சாயம் பூசப்பட்ட 2 டன் ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-06-07 17:19 GMT

போடியில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் கடைகளில், தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராகவன், போடி உணவு பாதுகாப்பு அதிகாரி சரண்யா ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது செயற்கை சாயம் பூசப்பட்ட 3 டன் ஏலக்காய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று போடி டி.வி.கே.கே.நகர், சுந்தரபாண்டியன் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏலக்காய் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் செயற்கை சாயம் பூசப்பட்ட 2 டன் ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்