அர்த்தநாரீஸ்வரரர் கோவில் ஆனித்தேரோட்டம்
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அர்த்தநாரீஸ்வரர் கோவில்
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவில் ஆனித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி- அம்பாள் வீதி உலா, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை 6 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். திருத்தேர் உபயதாரரும், அலங்காரம் மற்றும் பராமரிப்பு மண்டகப்படிதாரர்களான எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினர் சார்பில் 6.30 மணியளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
வாசுதேவநல்லூர் எஸ்.டி.கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தார் சார்பில் அலங்காரம் செய்யப்பட்ட திருத்தேரை மதியம் 1 மணிக்கு டாக்டர் சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், நகரப்பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மாலை 3.45 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் எஸ்.தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன், வாசுதேவநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுமங்கலி சமுத்திரவேலு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து சமுதாய மண்டபடிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தெப்ப திருவிழா
புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு தீர்த்தவாரி சப்தா வர்ணம் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயம் சார்பில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு நாடார் உறவின்முறை சார்பில் தெப்ப தேரோட்டம் நடைபெறுகிறது.