வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அர்த்த நாரீஸ்வரர் வீதி உலா

மாசிமக திருவிழாவையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அர்த்த நாரீஸ்வரர் வீதி உலா

Update: 2023-02-24 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கதவு அடைக்க திறக்கபாடும் வரலாற்று திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று 8-ம் நாள் திருவிழாவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் எழுந்தருளினர். பின்பு அர்த்தநாரீஸ்வரர் படி இறங்கி ராஜ நாராயண மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவு அர்த்தநாரீஸ்வரர், அப்பர், சம்பந்தர், சுந்தரருக்கு எழுந்தருளி காட்சி கொடுத்தார். இதை தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்