அரசு பள்ளியில் கலைத்திருவிழா

செங்கோட்டையில் அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.

Update: 2022-11-27 18:45 GMT

செங்கோட்டை:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டிகள் மாணவ-மாணவிகளை ஊக்கமளிக்கும் வகையில் காட்சிப்படுத்தும் விழாவாக தலைமை ஆசிரியர் வி.எஸ்.ராஜன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் இசக்கித்துரைபாண்டியன், தங்கம், முத்துசௌரா உள்பட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் வயலின், கீபோர்டு இசைக்கருவி நிகழ்ச்சிகள், பேண்டு வாத்தியம், வில்லிசை ஆகியன உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்