அரசு பள்ளியில் கலைத்திருவிழா
பாளையக்கோட்டை அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை அருகே உள்ள பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மலர்வண்ணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ-மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோன்ஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.