கலை திருவிழா போட்டிகள்
நீடாமங்கலம் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தன.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 2023-2024-ம் ஆண்டிற்கான அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைதிருவிழா போட்டிகள் நீடாமங்கலத்தில் நடைபெற்றது. வட்டார அளவிலான போட்டிகளில் முதல் 2 இடங்களில் தேர்வு பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் வருகிற 26-ந்தேதி பங்கேற்பார்கள். இந்த போட்டியில் 2 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளிநாடு கல்விச்சுற்றுலா செல்வார்கள். இந்த போட்டிகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் சம்பத், முத்தமிழன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா மற்றும் பலர் நடத்தினர்.