வட்டார அளவில் கலைத்திருவிழா
வால்பாறையில் வட்டார அளவில் கலைத்திருவிழா நடைபெற்றது.
வால்பாறையில் பள்ளி கல்வித்துறை உத்தரவின்பேரில் வட்டார அளவில் 6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் சங்கமிப்போம்-சமத்துவம் படைப்போம் என்ற தலைப்பில் கலைத்திருவிழா நடைபெற்றது. இதனை மாவட்ட கல்வி அலுவலர் கேசவக்குமார் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் தனித்திறமைகளை வெளிக்காட்டும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். குறிப்பாக மலைவாழ் குழந்தைகள் படிக்கும் உண்டு உறைவிட பள்ளி சார்பில் நடந்த கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.இதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.விழாவில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.