பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைவிழா

பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைவிழா நடைபெற்றது.

Update: 2022-11-30 11:26 GMT

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணியம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கலைவிழா போட்டி நடந்தது.

பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன் தலைமை தாங்கினார். கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கஜேந்திரன், பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், துணைத்தலைவர் ஜீவசத்தியராஜ், வட்டார கல்வி அலுவலர் சண்முகஆனந்தபாபு, காட்டுப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவரம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு கலந்துகொண்டு பேசினார். இதில் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 8 பள்ளியை சேர்ந்த 640 மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பள்ளி வேளாண்மை குழு தலைவர் சண்முகப்பிரியா, பாஞ்சாலை, காந்தி, பவுலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்