வட்டார அளவிலான கலைத்திருவிழா
வட்டார அளவிலான கலைத்திருவிழா காரைக்குடி அருகே கல்லலில் நடைபெற்றது.
காரைக்குடி,
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் கல்லல் ஒன்றியத்தில் வட்டார அளவிலான கலைத்திருவிழா காரைக்குடி அருகே கல்லலில் 2 நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு கல்லல் யூனியன் தலைவர் சொர்ணம்அசோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சங்கீதா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் பாஸ்கர்பாய்லோன், சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதயசங்கர், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கவின் கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம், மொழிதிறன் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் வனிதா, ஆசிரியர் பயிற்றுனர்கள் காளிராசா, சத்தியமூர்த்தி, ஜோதிமணி, மும்தாஜ் ஆகியோர் செய்திருந்தனர்.