ஆலங்குளம்:
ஆலங்குளத்தில், வட்டார வளமையம் சார்பில் கலைத்திருவிழா நடைபெற்றது. ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் 3 நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார். மாறாந்தை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி பெட்டிசிரோன்மணி வரவேற்றார். ஆலங்குளம் ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன் குத்துவிளக்கேற்றி, தொடங்கிவைத்துப் பேசினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜீவா, ஆசிரியர் பயிற்றுநர் பவித்ரா வைதேகி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவில் வட்டார வளமைய பயிற்றுநர் ராஜா நன்றி கூறினார்.
இரண்டாம் நாள் குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்து வருகின்றனர்.