அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய கண்காட்சி

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய கண்காட்சி

Update: 2022-11-17 18:50 GMT

பரமக்குடி,

பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய கண்காட்சி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார். நகர்மன்ற உறுப்பினர் பாக்கியம் முன்னிலை வகித்தார். இதில் மாணவர்கள் உருவாக்கிய பல்வேறு படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். இதில் போகலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வக்கீல் பூமிநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்