வட்டார அளவிலான கலைப்போட்டிகள் தொடக்கம்

நாமக்கல்லில் வட்டார அளவிலான கலைப்போட்டிகள் தொடங்கியது.;

Update: 2023-10-18 18:45 GMT

நாமக்கல்லில் நேற்று வட்டார அளவிலான கலைப்போட்டிகள் நடந்தது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது.

முதல்நாளான நேற்று கட்டுரை, பேச்சுப்போட்டி, விவாத மேடை, இணைய கருத்து உருவாக்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த 297 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) நடனம் மற்றும் ஓவியப்போட்டியும், நாளை (வெள்ளிக்கிழமை) நாடகம் மற்றும் இசை கருவி வாசிக்கும் போட்டியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்