பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா

பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா நடைபெற்றது.

Update: 2022-10-27 20:04 GMT

பெரம்பலூர் வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை பண்பாட்டு திருவிழா நேற்று நடந்தது. பெரம்பலூரில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த திருவிழாவை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் பெரம்பலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி தொடங்கி வைத்தார். இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செவ்வியல் வாய்ப்பாட்டு இசை, பாரம்பரிய நாட்டுப்புற வகை வாய்ப்பாட்டிசை, செவ்வியல் நடனம், பாரம்பரிய நாட்டுப்புற வகை நடனம், இரு பரிமாணம், மூன்று பரிமாணம் ஓவியம் வரைதல், உள்ளூர் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள், தனி நபர் நடிப்பிற்கான நாடகம், தாள வாத்தியம், மெல்லிசை கருவி இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் வருகிற 1-ந்தேதி பெரம்பலூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்