அதிமுக தொண்டர் 'ஒப்பாரி... தீக்குளிப்பு முயற்சி' ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
சென்னை,
ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தநிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.அப்போது அங்கிருந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டனர்.
ஒற்றை தலைமை கூடாது. ஜெயலலிதா மட்டுமே நிரந்த பொதுச்செயலாளர் எனக்கூறி மெரினாவில் அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.