கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது

Update: 2022-06-17 22:45 GMT

தாளவாடி

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மகாராஜன்புரம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மொபட்டை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 2 மூட்டைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அவற்றில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மொபட்டை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் இக்களூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 33) என்பதும், அவர் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிேலா ரேஷன் அரிசியுடன் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்