பால் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-04 17:49 GMT

பரமக்குடி, 

பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கங்களின்கீழ் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் கிராமங்களுக்கு சென்று பால் கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன்படி நிரந்தர பணியா ளர்களுக்கு தினமும் ரூ.250-ம் தற்காலிக பணியா ளர்களுக்கு ரூ.150-ம் ஊதியமாக வழங்கப் பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வில்லை. அதோடு கடந்த 2 மாதமாக சம்பளமும் வழங்கப் படாமல் உள்ளது. எனவே அதை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பரமக்குடி கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பால் விற்பனையாளர்கள் பால் கேன்களுடன் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்