கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-16 17:57 GMT

நாகர்கோவில், 

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அங்கமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது23). இவர் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கும், குரும்பூர் போலீஸ் நியைத்தில் கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. இவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் முத்துராமலிங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற முத்துராமலிங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை வடசேரி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்