ரவுடி, குண்டர் சட்டத்தில் கைது
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பாபு என்கிற சத்யபாபு. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது . இவரது பெயர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி நீடாமங்கலம் போலீசார் வாகன சோதனையின் போது ஆயுதங்களுடன் சத்ய பாபு பிடிபட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து மன்னார்குடியில் சிறையில் அடைத்தனர். சத்யபாபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சத்யபாபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் சத்யாபாபுவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.