வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பழனி அடிவாரம் பாட்டாளி தெருவை சேர்ந்த சேதுபதி மகன் பூபாலன் என்ற பூபாலகிருஷ்ணன் (வயது 31). இவர் மீது பழனி நகர், அடிவாரம் போலீஸ்நிலையத்தில் கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக பூபாலனை பழனி அடிவாரம் போலீசார் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பூபாலன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விசாகனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் விசாகன், பூபாலனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று போலீசார் பூபாலனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.