ஜாமீனில் வெளியே வந்தவரை வீடு புகுந்து தாக்கியவர் கைது

முன் விரோதம் காரணமாக ஜாமீனில் வெளியே வந்தவரை வீடு புகுந்து தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-12 16:56 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே மீசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சினேகா.

இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். சினேகாவிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா (50) என்பவரின் மகன் மணி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த மாதம் தசரதன் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜாவின் மனைவி கலைவாணியை தசரதன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தசரதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் தசரதன் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக ராஜா, கலைவாணி மற்றும் உறவினர்கள் 3 பேர் ஆகியோர் தசரதன் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார்சைக்கிள், மொபைட்டையும் அடித்து நொறுக்கிய உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த தசரதன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து தசரதன் தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்