கொலை, கஞ்சா வழக்கில் கைதான3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கொலை, கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம் முதியவர் கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மற்றும் திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் சிக்கியவர் உள்ளிட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு

ஸ்ரீவைகுண்டம் சிவராமமங்கலத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 70) என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த சீனி மகன் பூல்பாண்டி (42), மந்திரம் மகன் சாமிநாதன் (27) ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர். இதே போன்று திருச்செந்தூர் ஆலந்தலையை சேர்ந்த பாரீஸ் மகன் சாரூக் ராஜா (28) என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக திருச்செந்தூர் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், பூல்பாண்டி, சாமிநாதன், சாரூக் ராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆணடில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 9 பேர் உட்பட 116 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்