முறப்பநாட்டில் வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
முறப்பநாட்டில் வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
முறப்பநாடு:
முறப்பநாடு பக்கப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 27). இவரை முறப்பநாடு போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாரிமுத்தை கைது செ்ய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை முறப்பாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.