கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்கில் கைதான2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-12-21 18:45 GMT

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் உள்பட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா வழக்கு

புளியம்பட்டி அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் அய்யாத்துரை (வயது 67) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்ற வழக்கில், அக்கநாயக்கன்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த மாடசாமி மகன் ரஞ்சித் (27) என்பவரை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதே போன்று தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜெபராஜ் (28) என்பவரை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ரஞ்சித், ஜெபராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 43 பேர் உட்பட 265 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்