கொலை முயற்சி வழக்கில் கைதான2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஓட்டப்பிடாரம் அருகேகொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2023-01-11 18:45 GMT

கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கொலை முயற்சி

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் பகுதியில் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஓட்டப்பிடாரம் குலசேகரநல்லூரை சேர்ந்த லட்சுமணன் மகன் முருகன் (வயது 50), அவரது மகன் மாயகிருஷ்ணன் (20) ஆகியோரை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம்

அதன்பேரி்ல் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முருகன், மாயகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்