பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர் கைது

அரக்கோணம் அருகே பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-08-31 18:28 GMT

அரக்கோணம் அருகே அசமந்தூர் பகுதியில் கடந்த மாதம் பொது சொத்துக்களை அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 40) என்பவர் சேதப்படுத்திவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராஜா தக்கோலம் அடுத்த முருங்கை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்