ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-23 17:18 GMT

வேலூரில் இருந்து லத்தேரி வழியாக ஆந்திராவிற்கு ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு லத்தேரியில் இருந்து பரதராமிக்கு செல்லும் சாலையில் பனமடங்கி கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் இருந்த 6 மூட்டைகளில் ரேஷன்அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அவர் குடியாத்தம் அக்ராவரம் பகுதியை சேர்ந்த கங்காதரன் (வயது 38) என்பதும், வேலூரில் இருந்து ரேஷன்அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 300 கிலோ ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்