முன்விரோத தகராறில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

முன்விரோத தகராறில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-09-21 18:45 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர்(வயது 50). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜகோபால் மகன் சுப்பிரமணியன் (38) என்பவருக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பாலச்சந்தர் தனது ஊரில் இருந்து உடையார்பாளையம் கடைவீதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மீண்டும் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றபோது சுப்பிரமணியன், பாலச்சந்தரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலச்சந்தர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்