ரூ.10 லட்சம் சந்தன மரக்கட்டைகள் கடத்தியவர் கைது

செங்கோட்டை அருகே ரூ.10 லட்சம் சந்தன மரக்கட்டைகள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-27 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே ரூ.10 லட்சம் சந்தன மரக்கட்டைகள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

சந்தன மரக்கட்டைகள்

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் புளியரையை அடுத்து ஆரியங்காவு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விலை உயர்ந்த சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக கேரள வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள முட்டத்துறை பகுதியில் மரச்சிலை செய்யும் சிற்பியான நகுலன் (வயது 55) என்பவர் வீட்டில் ஏராளமான சந்தன மரக்கட்டைகள் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற ஆரியங்காவு வனத்துறையினர் நகுலனிடம் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவரது வீட்டில் இருந்த சந்தன மரக்கட்டைகள், ஆரியங்காவு வனப்பகுதியில் வெட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 20 கிலோ சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இதுதொடர்பாக ஆரியங்காவு வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்