அனுமதியின்றி பெட்ரோல், டீசல் விற்றவர் கைது

திருவாடானை அருகே அனுமதியின்றி பெட்ரோல், டீசல் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-16 18:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி ராஜா (வயது 35) இவருக்கு சொந்தமான ஆயில் கடையில் அரசு அனுமதி இன்றி பெட்ரோல் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகமது சைபுல் ஹிஷாம் தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர்.. அங்கு 80 லிட்டர் டீசல், 20 லிட்டர் பெட்ரோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.. அவற்றை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக மூர்த்தி ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்