அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-31 19:17 GMT

தாயில்பட்டி

தாயில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வாகன சோதனையில் ஈடுபட்டாா். அப்போது பஸ் நிறுத்தத்தில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை நடத்தினார். அதில் அனுமதியின்றி 60 குரோஸ் வெள்ளைத்திரி வைத்திருந்ததும், தாயில்பட்டி பகுதியை சேர்ந்த வீரராஜ் (வயது50) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பட்டாசு திரியை பறிமுதல் செய்ததுடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்