லாரியை வழிமறித்து டிரைவரை மதுபாட்டிலால் தாக்கியவர் கைது

ஒரத்தநாடு அருகே லாரியை வழிமறித்து டிரைவரை மதுபாட்டிலால் தாக்கியவர் கைது

Update: 2023-02-24 18:45 GMT

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள களஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது30) லாரி டிரைவர், இவர் நேற்று முன்தினம் வல்லத்திலிருந்து ஒரத்தநாட்டுக்கு லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது வடக்கூர் பிரிவு சாலை அருகே பார்த்திபன் ஓட்டிச் சென்ற லாரியை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 30) என்பவர் பார்த்திபனிடம் தகராறு செய்து அவரை மது பாட்டிலால் தாக்கினார். இதில் தலையில் காயம் அடைந்த பார்த்திபன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து லாரி டிரைவர் பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்