அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-04-29 19:09 GMT

சிவகாசி

வெடிபொருள் குற்றத்தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் தலைமையில் போலீசார் சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையின் அருகே சஞ்சீவி பாபு (வயது 61) என்பவர் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த பட்டாசுகள் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து சஞ்சீவி பாபுவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்